Weight loss smoothies, a magic drink : உடல் எடை குறைய ஸ்மூத்திஸ் [2021 Latest]

Weight loss smoothies,உடல் எடை குறைய ஸ்மூத்திஸ் , smoothies

Weight loss smoothies, பழங்களின் கூழ் உடல் எடை குறைய உதவுமா?

Weight loss smoothies : திட உணவுகள், அதிகப்படியான மாவுச்சத்துள்ள உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகள் தான் உடல் எடை அதிகரிக்கக் காரணம். உடல் எடை குறைய அதிக கொழுப்பு மற்றும் மாவுச்சத்துள்ள உணவுகளைக் குறைத்தாலே போதும். 

போதிய உடற்பயிற்சி சரியான உணவு பழக்கம் இருந்தாலே நமது உடலில் அதிகப்படியான எடையை எளிமையாக குறைக்கலாம்.  நமது செரிமானம் மற்றும் கொழுப்பை குறைக்க மிகச் சிறந்த ஒரு உணவாக இந்த ஸ்மூத்திஸ்(Smoothies) பார்க்கப்டுகிறது.

Weight loss smoothies,உடல் எடை குறைய ஸ்மூத்திஸ் , smoothies

இன்றைய பதிவில் நாம் பார்க்க இருக்கும் ஸ்மூத்திஸ்:

  1. Strawberry 
  2. Apple + Banana 
  3. Pomegranate 
  4. Blueberry 
  5. Guava

Weight loss smoothies,உடல் எடை குறைய ஸ்மூத்திஸ்

Strawberry Smoothies

சிவந்த நிறம் கொண்ட ஸ்ட்ராபெர்ரி பழத்தில், அதிக வைட்டமின், ஆக்ஸிஜனேட்ரிகள்(antioxidant) மற்றும் தாதுக்கள்(minerals)  நிறைய உள்ளன. 

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை மேம்படுத்தவும், இதய நோய்க்கான பல ஆபத்து காரணிகளைக் குறைக்கவும் உதவுகிறது. 

ஸ்ட்ராபெர்ரி மிகவும் சத்தானது மற்றும் அதிக அளவு நீரைக் கொண்டுள்ளது, சுமார் 91% தண்ணீர் எடையைக் கொண்டுள்ளது, ஸ்ட்ராபெர்ரி பழத்தில் குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைய மிகவும் பயனளிக்கிறது. 

நன்கு கழுவிய ஸ்ட்ராபெர்ரி பழத்தை சிறுது சிறிதாக நறுக்கி, 3 தேக்கரண்டி கெட்டியான தயிர் சேர்த்து அதனுடன் சுவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் சிறிதளவு சேர்த்து மிக்ஸியில் நன்றாக ஒரு கூழ் பதத்திற்கு அரைத்து எடுத்து அதனுடன் சிறிது நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி  சேர்த்து தேவை எனில் ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி சற்று உடலுக்கு குளிர்ச்சி என்பதால், காலை நேரம் அல்லது மதிய உணவுக்கு மாற்றாக இதை அருந்தலாம், விரைவில் செரிமானம் ஆகக்கூடிய ஸ்மூத்திஸ் என்பதால் உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது.

Apple + Banana Smoothies 

ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்ந்த ஒரு ஜூஸ். அப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, வாழைப்பழத்தில் அதிகப்படியாக கார்ப், விட்டமின்கள் மற்றும் உடலுக்கு தேவையான தாதுக்கள் உள்ளன, இந்த அளவு ஊட்டச்சத்து அதிகமுள்ள இரண்டு பொருள்களை வைத்து நாம் ஒரு ஜூஸ் தயார் செய்யப் போகிறோம்.

சிறிய அளவு ஆப்பிள் எடுத்தால், இரண்டு எடுத்துக் கொள்ளவும், பெரிய ஆப்பிள் இருந்தால், 1 போதுமானது. நன்றாக கழுவி, தோலை நீக்கி, சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வாழைப்பழம் தோல் நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய ஆப்பிள் மற்றும் வாழைப்பழத்தை  ஒரு மிக்ஸியில் போட்டு, 3 தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். சுவைக்காக 1 தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த ஸ்மூத்திஸ் காலை மற்றும் இரவு நேர உணவுக்கு மிகவும்  ஏற்றது, வாழைப்பழம் இரவு முழுவதும் நமக்கு ஆற்றலை தருகிறது, நார்ச்சத்துள்ள பழங்கள் என்பதால், செரிமானத் தொல்லை இந்த ஸ்மூத்திஸ் குடிப்பதால் வருவதில்லை. 

Pomegranate Smoothies 

மாதுளையில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை கொழுப்பை எரித்து உங்கள் வளர்சிதை மாற்றத்தை(boost your metabolism) அதிகரிக்க உதவுகிறது. மாதுளை சாறு உங்கள் பசியைக் குறைக்க உதவுகிறது. இது சர்க்கரை நிறைந்த பானங்களுக்கு ஆரோக்கியமான மாற்றாகும். சர்க்கரை எந்த ஊட்டச்சத்து நன்மைகளையும் அளிக்காது.

Weight loss smoothies,உடல் எடை குறைய ஸ்மூத்திஸ் , smoothies

சர்க்கரை அதிகப்படியான கலோரிகளை உருவாக்குகிறது, அவற்றில் பெரும்பாலானவை உடல் இயங்குவதற்கு தேவையில்லை. இதன் விளைவாக அவை கொழுப்பு செல்களில் சேமிக்கப்படும். மாதுளை சாறு குறைந்த கலோரி கொண்ட ஆரோக்கியமான ஒரு உணவு.

நன்கு உரித்த மாதுளையை, 1/2 கப் கெட்டி தயிர் சேர்த்து, 1/4 கப் அளவுக்கு சிறிதாக நறுக்கிய பேரீச்சம்பழத்தை ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும், பேரீச்சம்பழத்தில் நமக்கு தேவையான அளவு இனிப்பு உள்ளதால், நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் சேர்க்கத் தேவை இல்லை.

நன்கு அரைத்த இந்த ஸ்மூத்திஸ் உடன் சிறிது மாதுளை சேர்த்து பருகி வர, நமது உடல் எடையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.

சிறுதானியங்களைக் கொண்டு உடல் எடை குறைய 

Blueberry Smoothies 

ப்ளூபெர்ரி பழத்தில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள்(antioxidants) இருப்பதால், இவை நமக்கு எப்பொழுதும் சுறுசுறுப்பையும் தேவை இல்லாத கொழுப்பை குறைக்கவும் மிகவும் உதவியாக உள்ளது.

Weight loss smoothies,உடல் எடை குறைய ஸ்மூத்திஸ் , smoothies

1/2 கப் ப்ளூபெர்ரி, அதே அளவு (1/2 கப்) கெட்டி தயிர், இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து ஐஸ் கட்டிகளுடன் ஒரு மிக்ஸியில் நன்கு அரைத்து, தினமும் காலை உணவுக்குப் பதிலாக இந்த ஸ்மூத்திஸ் எடுத்துக் கொண்டால், நமது உடல் எடை குறைய இந்த ப்ளூபெர்ரி பெரிதும் உதவியாக இருக்கும். 

Guava Smoothies

கொய்யா பழங்களில் நம்பமுடியாத சுவையானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த வெப்பமண்டல பழத்தில் குறைந்த கலோரி உள்ளது, நார்ச்சத்து நிரம்பியுள்ளது மற்றும் ஆரோக்கியமான உணவுப் பட்டியலில் கொய்யா எப்பொழுதும் உள்ளது.

Weight loss smoothies,உடல் எடை குறைய ஸ்மூத்திஸ் , smoothies

நம்முடைய பாரம்பரிய பழமான கொய்யாவில் நிறைய பலன்கள் உள்ளன, 

  • நமது உடலின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் 
  • நமது இதயத்தை பாதுகாக்கவும் 
  • மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குறைக்கவும் 
  • நமது உடலின் செரிமானத்தை சரி செய்யவும் 
  • நமது உடல் எடை குறைய 
  • கேன்சர் நோய் வராமல் காக்க 
  • நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 
  • நமது சரும அழகை பேணிக்காக்க

இந்த அளவு ஊட்டச்சத்துள்ள ஒரு பழத்தை நாம் அதிக அளவில் உண்பதில்லை, வெளிநாட்டு பழங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம், நம்முடைய நாட்டுப் பழங்களுக்கு கொடுத்து அவற்றை முறையாக உண்டாலே நமது உடல் எடை வெகுவாக குறையும்.

3 தேக்கரண்டி அவல்( வெள்ளை அல்லது சிவப்பு), பேரீச்சம்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கி (அதிக அளவு 4 ஒரு நாளைக்கு), இதனுடன் 2 தேக்கரண்டி கெட்டி தயிர் சேர்த்து கொள்ளுங்கள். 

தயிர் பிடிக்காதவர்கள், பால் அல்லது தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளலாம். 

சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளுங்கள், கொய்யாப் பழத்தை நன்கு கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, மேல ஊற வாய்த்த அவல் மற்றும் பேரீச்சம்பழத்துடன், கொய்யா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன், 1/2 தேக்கரண்டி நன்கு அரைத்த ஆளி விதை (Flax seeds ) சேர்த்து பருகுங்கள்.

சுவையான கொய்யா ஸ்மூத்திஸ் நமது உடல் எடை குறைய மட்டுமல்லாமல் தேவை இல்லாத கொழுப்பைக் குறைக்கவும், செரிமானம் ஆகவும், உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் மிகவும் சிறந்த பழம்.

உடல் எடை குறைய சிறந்த டயட்

மேலே  சொன்ன இந்த 5 ஸ்மூத்திஸ் போலவே, நீங்களும் உடல் எடை குறைக்கும் சிறந்த பழங்களை தேர்வு செய்து ஒரு smoothies தயார் செய்யலாம். குறைந்த அளவு சர்க்கரை, அதிக மாவுச்சத்து இல்லாத பழங்களை தேர்வு செய்தாலே போதுமானது.

தயிரில் இயற்கையாக கிடைக்கும் நுண்ணுயிர் / புரோபயாடிக் (Probiotics) அதிக அளவில் உள்ளது, இது உடல் எடை குறைய மிகவும் தேவையான ஒரு பொருள். உங்கள் ஸ்மூத்திஸ் எதுவாக இருந்தாலும், நீங்கள் முடிந்த வரை தயிர் சேர்த்துக் கொண்டால், உங்கள் எடை குறைய தயிர் ஒரு பெரிய பங்காற்றும்.

Weight loss smoothies வீடியோ லிங்க்

Related Content: Weight loss information in tamil

About Ambika Subramani 9 Articles
Certified Nutritionist & Advanced diploma in Weight loss management

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*