
Weight loss drink & fat cutter
ஆயுர்வேத மருத்துவம், நமது உணவை மருந்தாக அளிக்கும் ஒரு சிறந்த மருத்துவ முறை, உடல் எடை குறைய, அதிகப்படியான கொழுப்பு குறைய ஆயுர்வேத மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட இந்த weight loss drink பற்றிய பதிவு 8லட்சத்திற்கும் அதிகமான மக்களால் Youtubeஇல் பார்க்கப்பட்டுள்ளது.
உடல் எடை அதிகரிப்பு என்பது இந்த காலத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றாகி விட்டது. அதிக கொழுப்புள்ள மற்றும் மாவுச்சத்துள்ள உணவுகளை உண்பதால், தேவையில்லாமல் உடல் எடை அதிகரிக்கிறது. இந்த weight loss drink பலருக்கு நல்ல பலனை கொடுத்ததோடு, நீண்ட கால உடல் எடை அதிகரிப்புக்கு ஒரு பெரிய முற்றுப் புள்ளியாக இருந்தது.
உடல் எடை எப்படி குறைப்பது என நீங்கள் யோசிப்பவராக இருந்தால் உங்களுக்காக பல உடல் எடை குறைவதற்கான யோசனைகளை எங்கள் இணைய பக்கத்தில் மற்றும் youtube இல் வழங்கி வருகிறோம். அவைகளை நீங்கள் மறக்காமல் பின்பற்றலாம்.
Weight loss drink : தேவையான பொருட்கள்
- 1/4 கப் தனியா விதை
- 1/4 கப் சீரகம்
- 1/4 கப் சோம்பு
- 1/4 கப் ஆளி விதை
- 1/2 கப் கறிவேப்பிலை
- 1/2 தேக்கரண்டி பெருங்காயம்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
Ayurvedic drink : பலன்கள்
தனியா விதை
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
- நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்
- இதயத்தை பலப்படுத்தும்
- மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
- செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
- தோற்று நோய்க்கு எதிராக செயல்படும்
- சருமத்துக்கு பாதுகாப்பைக் கொடுக்கும்
- நமது உணவில் பயன்படுத்த எளிமையானது.
தனியா விதை ஆன்லைன் ஸ்டார்
சீரகம்
- சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள்(Antioxidants)
- கேன்சர் நோய்க்கு எதிராக செயல்படும்
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
- இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க
- உடல் எடை குறைக்க
- குடல் நோய்க்கு எதிராக செயல்படும்
சீரகம் ஆன்லைன் ஸ்டார்
சோம்பு
- செரிமானம்
- மாதவிடாய் குறைபாட்டை சரி செய்யும்
- சருமத்துக்கு சிறந்தது
- நுண்ணுயிர் தொற்று மற்றும் நோய்களை சரி செய்யும்
- உடல் எடை குறைய
- சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள்(Antioxidants)
- வளர்ச்சிதை மாற்றத்திற்கு (metabolism)
சோம்பு ஆன்லைன் ஸ்டார்
ஆளி விதை (Flax Seeds)
- ஓமெகா 3 கொழுப்பு அமிலங்கள் (Rich in Omega 3 fatty acids)
- சிறந்த நார்ச்சத்து கொண்டது
- நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படுகிறது (type 2 diabetes)
- கேன்சர் நோய்க்கு எதிராக செயல்படும்
- வளர்ச்சிதை மாற்றத்திற்கு (metabolism)
- செரிமானம் சார்ந்த தொல்லைக்கு சிறந்த தீர்வு
- சிறந்த புரதம்
ஆளி விதை ஆன்லைன் ஸ்டார்
கறிவேப்பிலை
- உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற (Detoxifier)
- உடல் குண்டாவதை குறைக்கும்
- உடல் இரத்த சர்க்கரை அளவை சரி செய்யும்
- உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் எளிது.
பெருங்காயம்
- செரிமானம் சிறக்க
- வாயுத்தொல்லை சரி செய்ய
மஞ்சள் தூள்
- இரத்தத்தை சுத்தப்படுத்தும்
- சளிக்கு சிறந்த மருந்து
- சிறந்த கிருமி நாசினி
- நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்
- சிறந்த ஆக்ஸிஜனேற்றிகள்(Antioxidants)
- உடல் எடை குறைய
மேல கூறிய அனைத்திலும், செரிமானத்தை சரி செய்யும் மருத்துவ குணங்கள் அதிகமாக இருப்பதால், உடல் எடை குறைவதில் இந்த பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த மருத்துவ குணமுள்ள பொருட்களை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டாலே நமது உடல் எடை அதிகமாக குறையும் மற்றும் தேவையில்லாத கொழுப்பு நமது உடலில் சேராது.
ஒரு வாணலியில் 1/4 கப் தனியா விதை, 1/4 கப் சீரகம், 1/4 கப் சோம்பு, 1/4 கப் ஆளி விதை, 1/2 கறிவேப்பிலை, கறிவேப்பிலை மட்டும் நாம் சேர்க்கும் மற்ற அளவுகளை விட இரு மடங்கு எடுக்க வேண்டும். 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வறுத்தெடுக்கவும்.
முடிந்த வரை, குறைந்த அளவு தீயில் வறுக்கவும்(slow sim). 30 நிமிடங்கள் இந்த வறுத்தெடுத்த பொருட்களை ஆறவிடவும். நன்கு ஆறியவுடன், ஒரு மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இந்த பொடியை மறுபடியும் ஆறவைத்து காற்று புகாதவாறு ஒரு பெட்டியில் அல்லது ஜாடியில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். வறுத்து அரைத்த போடி என்பதால், 3 மாதங்கள் வரை இந்த போடி கெட்டு போகாமல் இருக்கும்.
எப்படி குடிக்க வேண்டும்
காலையில் வெறும் வயிற்றில் 1/2 தேக்கரண்டி இந்த பொடியுடன், 1 கப் வெதுவெதுப்பான நீரில்(சூடு நீர் இல்லை), நன்றாக கலக்கி குடிக்க வேண்டும். நல்ல மணமுடன் மிகுதியான சுவையுடன் இருப்பதால், இதனுடன் எந்த ஒரு சுவையூட்டியும் சேர்க்கத் தேவையில்லை, தேவைப்பட்டால் சிறிது தேன் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க முயற்சி செய்யுங்கள்.
இரவு உறங்குவதுற்கு முன், அரை மணி நேரம் முன்பு ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் இந்த போடி 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி குடிக்கவும்.
இந்த weight loss drink தொடர்ந்து ஒரு மாதம் நீங்கள் எடுத்து வந்தால், உங்கள் உடல் எடையில் நல்ல மாற்றம் காண்பீர்கள். இந்த போடியில் சேர்க்கப்படும் பொருள்கள் அனைத்தும் நமது அன்றாட உணவில் ஒரு அங்கமாக இருப்பதால், எந்த ஒரு பக்க விளைவுகளும் இந்த weight loss drink / fat cutter ஏற்படுத்தாது.
இந்த fat cutter drink எடுக்கும் போது நீங்கள் அதிக அளவு உடற்பயிற்சி செய்யத் தேவை இல்லை, உங்களால் செய்ய முடிந்தால், மிகவும் நல்லது, செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நாளைக்கு 3 சுற்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தால் சிறந்த பலனை விரைவில் எதிர்பார்க்கலாம்.
காலை அல்லது மாலை வேளையில் குறைந்தது 40 நிமிடங்கள் மிதமான நடை பயிற்சியுடன் இந்த fat cutter drink குடித்து வந்தால், நீண்ட காலத்திற்கு உங்கள் உடல் எடையை அதிகரிக்காமல் பராமரிக்கலாம்.
குறிப்பு : நீங்கள் வேறு ஏதாவது மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால், மருத்துவரை ஆலோசித்து இந்த பொடியை எடுத்துக் கொள்ளவும்.
இந்த பதிவை காணொளி வாலிடிவில் காண, இந்த லிங்க் கிளிக் செய்யவும், 8லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களைப் பெட்ரா மிகச்சிறந்த டயட்.
Leave a Reply