
Weight loss diet | Lose 6 kgs in 7 days
நம்முடைய அதிகப்படியான உடல் எடைக்கு காரணம், நமது உணவு பழக்க வழக்கம் மற்றும் நமது உடலில் தேங்கியுள்ள அதிகப்படிய கொழுப்பு மட்டுமே. நம்முடைய வாழ்க்கை முறையில் சிறிய மாற்றம் செய்தால் நாம் உடல் எடை அதிகரிப்பு என்ற தொல்லை வாழ் நாள் முழுவதும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
7 நாட்களில் 6kg எடை குறைக்க முடியுமா?
பலரும் பலவித உணவு பழக்க வழக்கங்களை கொண்டிருப்போம், ஒரே நாளில் நமது உணவு பழக்கத்தை மாற்ற முடியாது, அதே போல ஒரே நாளில் நமது உடலின் எடையை குறைக்க முடியாது. முடிந்தால் முடியாதது ஒன்றும் இந்த உலகில் இல்லை, நமக்கு தேவை உணவுக் கட்டுப்பாடு மற்றும் சிறிது உடற்பயிற்சி.
7 நாட்களுக்கான டயட்
நாம் இந்த டயட் முறையை 7 ஏழு நாட்களுக்கு சுழற்சி முறையில் பின்பற்றப் போகிறோம். அதாவது ஒரு வாரத்துக்கு மட்டுமே இந்த உணவை நாம் நமது டயட் இல் சேர்த்துக் கொள்ளப் போகிறோம், மாதத்தின் முதல் வாரம் இந்த டயட் எடுத்துக் கொண்டால், இரண்டாவது வாரம் இந்த டயட் பின்பற்றக் கூடாது.
இந்த டயட் முறையில் நாம் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் மட்டுமே நமது உணவாக எடுத்துக் கொள்ளப் போகிறோம். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என்பது நமது உணவு உட்கொள்ளும் நேரம், இந்த 10 மணி நேரத்திற்குள் நாம் நமது காலை முதல் இரவு வரையில் 5 வேலை உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
உணவு முறை
- காலை வெறும் வயிற்றில் – கேரட் ஜூஸ் (Detox drink)
- காலை உணவு – ஸ்மூத்திஸ் (Smoothies)
- சிற்றுண்டி – கடலை / வேக வாய்த்த சுண்டல்
- மதிய உணவு – பச்சை காய்கரிகள்(Salad)
- சிற்றுண்டி – கடலை / வேக வாய்த்த சுண்டல்
- இரவு உணவு – காய்கறி தோசை
இந்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை நாம் பாத்து மணி நேரத்திற்குள் உன்ன வேண்டும்.
கேரட் ஜூஸ் : Detox drink
காலையில் கேரட் சிறிது சிறிதாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸியில் போடு நன்றாக அறைத்து வடிகட்டிக் கொள்ளவும். சிறிது எலுமிச்சை சாறு, சப்ஜா விதை(10 நிமிடங்கள் ஊற வைத்து) சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஏழு நாட்களும், இந்த சாரோட ஜூஸ் நாம் எடுத்துக் கொண்டால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.
கேரட் பிடிக்காதவர்கள், கிரீன் டி அல்லது எலுமிச்சை சாறு வெறும் வயிற்றில் தினமும் குடிக்கலாம்.
கேரட் உடல் எடை குறைக்க மட்டுமல்லாமல், முகத்திற்கு பொலிவு கொடுக்கவும், நம் சரும அழகை மேம்படுத்தவும் உதவுகிறது.
கலோரி கணக்கிடும் முறை
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் வேறு வேறு அளவுள்ள கலோரிகளை கொண்டுள்ளது, நாம் அதிக கலோரிகளை எடுத்துக் கொண்டால், நம்மால் சுலபமாக எடை குறைக்க முடியாது. கலோரிகளை கணக்கிட நான் பயன்படுத்தும் ஆப் Myplate, கூகிள் பிலே ஸ்டாரின் லிங்க் இதோ.
காலை உணவு ஸ்மூத்திஸ்
உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பழம் மற்றும் தயிர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து ஒரு ஜூஸ் போல குடிக்கப் போகிறோம், பொதுவா இனிப்பிற்கு வெள்ளை சர்க்கரைக்கு பதில், தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
- மாதுளை + பேரிச்சம்பழம் ஸ்மூத்திஸ்
- ஸ்ட்ராவ்பெரி ஸ்மூத்திஸ்
- ஆப்பிள் + வாழைப்பழம் ஸ்மூத்திஸ்
- ப்ளூ பெர்ரி ஸ்மூத்திஸ்
இந்த 4 ஸ்மூத்திஸ் உண்டான செய்முறை வீடியோ வடிவில் பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும். Best Smoothie recipe
காலை சிற்றுண்டி
காலை உணவிற்கு பிறகு, நாம் சிறிது சிற்றுண்டியாக(Snacks) வேக வய்த்த சுண்டல்(கருப்பு / வெள்ளை கடலை) / காராமணி, முளைகட்டிய பயிறு(1/4 முதல் 1/2 கப்).
அல்லது
20 முதல் 30 பாதம் பருப்பு / 10 முதல் 15 முந்திரி பருப்பு / நிலக்கடலை.
மதிய உணவு
நறுக்கிய பச்சை காய்கறிகள் / பழங்களை மதிய உணவாக எடுத்துக்கொள்ளப் போகிறோம். பழங்கள் மற்றும் காய்கறிகளின் தேர்வை நீங்கள் தினமும் மாற்றிக் கொள்ளலாம், ஒரே காய்கறிகளை / பழங்களை தினமும் உண்டால், நாம் அதை வெறுக்க ஆரம்பிப்போம்.
நம்முடைய காய்கறி / பழ சாலட்களில் (Salad) குறுமிளகு, ஆளிவிதை(Flax seeds), திருநீற்றுப்பச்சிலை(Basil / Sabja / Chia), தாயிர் எலுமிச்சை சாறு சேர்த்து அதன் சுவையை கூடலாம்.
நம் காய்கறி உணவில், முடிந்த வரை கீரை வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். முட்டை கோஸ் ஒரு சிறந்த உடல் எடை குறைக்க உதவும் காய்கறி.
மாலை நேர சிற்றுண்டி
மதிய உணவிற்கு பிறகு, காலையில் எடுத்தது போல, நாம் சிறிது சிற்றுண்டியாக(Snacks) வேக வய்த்த சுண்டல்(கருப்பு / வெள்ளை கடலை) / காராமணி, முளைகட்டிய பயிறு(1/4 முதல் 1/2 கப்).
அல்லது
20 முதல் 30 பாதம் பருப்பு / 10 முதல் 15 முந்திரி பருப்பு / நிலக்கடலை.
இரவு உணவு
நாம் இரவு உணவை, உறங்குவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரத்திற்க்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நமது உணவு சிறந்த முறையில் செரிக்க உதவுகிறது. இரவு உணவிற்கு பிறகு உடனே உறங்குவதால், நமது உடலில் அதிகப் படியான கொழுப்பு சேரும், இதை தவிர்க்கவே, இரவு உணவிற்குப் பிறகு, இரண்டு மணி நேரம் இடைவெளி வேண்டும்.
நாம் உணவாக, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்த ஒரு தோசை எடுத்துக்கொள்ளப் போகிறோம். தோசைக்கு அரிசி மாவிற்கு பதில் கோதுமை மாவை சேர்க்க போகிறோம், இதனால், அதிகப்படியான கலோரி தவிர்க்கப்படுகிறது. கோதுமை மாவு காய்கறியில் அளவில் 4இல் 1 மடங்கு மட்டுமே எடுக்கப் போகிறோம்.
கோதுமை மாவிற்கு பதிலாக கேழ்வரகு(Raghi) சேர்த்தும் அடை போல ஒரு தோசை கல்லில் சிறிது எண்ணெய் சேர்த்து சமைக்கலாம்.
முருங்கை கீரை ஒரு சிறந்த உணவு, உடல் எடை குறைக்க நினைக்கும் அனைவரும், தங்கள் உணவில் ஒரு வேளையாவது முருங்கை கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது. முருங்கைக் கீரையில் அதிக கால்சியம் சத்து உள்ளது.
முருங்கை கீரையில் கேழ்வரகு சேர்த்து ஆடை செய்யலாம்.
உடல் எடை குறைக்க உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் சேர்த்து பொறுமை இருந்தால், நீங்கள் விரும்பும் எடையை எளிதில் அடையாளம்.
இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வியூஸ் யூடூபில்
Weight loss diet | Lose 6 kgs in 7 days
Related topic : My weight loss journey / Weight loss in Tamil
இது போன்ற டயட் மற்றும் உணவு விவரங்களுக்கு என்னுடைய Youtube channel பார்க்கவும். Weight loss in Tamil
it is a quality articles