Walking in 8 shape effective for weight loss in Tamil – Is it True?

Walking in 8 shape for weight loss in Tamil

Walking in 8 shape for effective weight loss in Tamil

உடல் எடை குறைய விரும்புவோரின் முதல் பயிற்சி நடை பயிற்சியாய் தான் இருக்கும். பெரும்பாலான மருத்துவரின் அறிவுரையும் நடை பயிற்சியில் தான் துவங்கும். நடை பயிற்சி உடல் எடை குறைய மட்டுமில்லாமல், நமது மனநிலை மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு புத்துணர்வு தருகிறது. நமது வயது முதிர்வு, காலில் இருந்து தான் துவங்குகிறது என மருத்துவம் கூறுகிறது.

நமது கால்களை பலப்படுத்தினால், நமது வயது முதிர்வை தவிர்க்கலாம், நம்மில் பெரும்பாலானோர் நடை பயிற்சி செய்யாமல், நேரமின்மை எனக் கூறுகிறோம். நமது ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு சிறிய உடற்பயிற்சி மிகவும் முக்கியம், அது சிறிய நடைபயிற்சியாக இருந்தாலும் சரி, சீரான ஓட்டம்(Jogging) ஆக இருந்தாலும் சரி, ஏதேனும் ஒரு உடற்பயிற்சி நாம் அன்றாடம் செய்யப் பழக வேண்டும்.

மருத்துவர்களின் பரிந்துரை, குறைந்தது 45 நிமிடங்கள் சிறிய நடைபயிற்சி, காலை அல்லது மாலை முடிந்தால் இரண்டு வேலையும் நடக்கலாம். நேரமின்மை காரணமாக நினைப்பவர்கள், வழக்கமான நடைப்பயிற்சிக்கு மாற்றாக இந்த 8 வடிவ நடை பயிற்சி (Walking in 8 Shape) செய்யலாம். இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம், எவ்வாறு செய்யலாம் என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.   

walking in 8 Shape

Walking in 8 Shape

நடைப்பயிற்சி என்றதும், நாம் அனைவரும் பூங்காக்களில், உடற்பயிற்சிக் கூடங்களில் நடையாய் நடப்பதை பார்த்திருப்போம், அனைவருமே ஒரு நேர்கோட்டில் நேரான வடிவத்தில் தங்கள் நடை பயிற்சியை செய்வார்கள். ஆனால் இந்த 8 வடிவ நடை பயிற்சி நேர்கோட்டு நடைப்பயிற்சியைக் காட்டிலும் சிறந்த பலனை கொடுக்கும்.

வீடியோ லிங்க்  : 8 shape walking vs 10000 steps எது சிறந்தது?

6 அடி விட்டம் கொண்ட இரண்டு வட்டங்களை 8 வடிவில் நாம் வரைந்து கொள்ளலாம், இந்த வடிவம் தெற்கு மற்றும் வடக்கு நோக்கி இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மொட்டை மாடி, வீட்டின் முற்றம் என எங்கு வேண்டுமானாலும் நீங்கள் இந்த 8 வடிவத்தை வரைந்து வைத்துக் கொள்ளலாம். வரைய முடியவில்லை எனில் நீங்கள் இந்த வடிவத்தை மனதில் நினைத்துக் கொண்டு உங்கள் நடை பயிற்சியை தொடங்கலாம்.

Walking in 8 shape, weight loss in Tamil

எப்பொழுது நாம் நடக்க வேண்டும்? 

நடைப்பயிற்சி செய்ய உகந்த நேரம் எப்பொழுதும், காலை அல்லது மாலை, குறிப்பாக காலை பயிற்சி செய்யும் போது வெறும் வயிற்றில் உங்கள் பயிற்சியை தொடங்கினால், சிறந்த பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம். 8 வடிவ நடை பயிற்சியை நீங்கள் தினமும் உங்கள் பழக்க வழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள். 

Weight loss in Tamil இது போன்ற கட்டுரைகளுக்கு தவறாமல் இணைந்திடுங்கள். 

எவ்வாறு நடக்க வேண்டும்?

முதலில் நீங்கள் நடை பயிற்ச்சியை துவங்கும் போது 15 நிமிடங்கள் தெற்கு வடக்காக கடிகாரம் சுற்றும் முறையிலும் அடுத்த 15 நிமிடங்கள் கடிகாரம் சுற்றும் முறைக்கு எதிராகவும் நடக்கவும். 15 நாட்கள் கழித்து உங்களின் சுற்றும் நேரத்தை சிறிது அதிகப்படுத்தவும். இந்த நேரத்தை நீங்கள் 45 நிமிடங்கள் வரை ஒரு சுற்றுக்கு நடக்கலாம். ஒரு நாளைக்கு பல்வேறு சுற்றுகளை நீங்கள் நிறைவேற்றலாம்.

Read also : My weight loss journey 90kgs to 63kgs

தெற்கு வடக்காக நடக்கும் முறை எவ்வாறு உடல் எடை குறைய உதவும்?

நாம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நடக்கும் போது, பூமியின் காந்த விசைக்கு எதிராக நடக்கிறோம், இதனால் நமது உடலின் ஒவ்வொரு பாகமும் புத்துணர்ச்சி பெறுகிறது. 8 வடிவில் நாம் நடக்கும் போது, நமதுகணுக்கால்கள், முட்டி, தோள்கள், வயிறு, பாதம், இடுப்பு என அணைத்து பாகங்களுக்கும் ஒரு அசைவு / இயங்குகிறது.

8 வடிவில் நாம் நடக்கும் போது, நமது எண்ணம் முழுவதும் 8 வடிவில் மட்டுமே இருக்கும் அது நமது உடல் எடை குறையும் எண்ண ஓட்டமாக இருக்கும், நாம் மனதை கட்டுப்படுத்தி இந்த 8 வடிவ நடைப்பயிற்சி செய்தால் நமது உடல் மெலிவதை நாம் கண்கூடாக பார்க்க முடியும்.

Walking in 8 shape, Weight loss in tamil

என்னென்ன பலன்கள்

இந்த 8 வடிவ நடைப்பயிற்சி சித்தர்களால் முறைப்படுத்தப்பட்டது, இது ஒரு யோகா பயிற்சி எனவும் கூறலாம், இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்வதால், நமக்கு கை, கால் வலி, முதுகு வலி எல்லாமே கூடிய விரைவில் சரி ஆகும். உடல் எடை குறைய மட்டுமல்லாமல், நீரிழிவு குணமாகவும், நாள் பட்ட உடல் வலி உள்ளவர்கள் இந்த 8 வடிவ உடற்பயிற்சி செய்தால் வலிகள் குணமாகும்.

ஆஸ்த்மா, மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் நுரையீரல் சம்மந்தமான நோய்களுக்கும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி ஒரு சிறந்த ஆறு மறுந்தகப் பார்க்கப்படுகிறது. 8 வடிவில் நடக்கும் பொது நமது இடுப்பு மற்றும் மூட்டுகள் திறம்பட வேலை செய்கிறது, இது கை வீசி நடை பயிற்சி செய்வதைக் காட்டிலும் அதிக திறனுடன் இருக்கும். ஒருவர் சாதாரணமாக 30 நிமிடங்கள் நடந்தால் 8 வடிவில் நடக்கும் போது 10 நிமிடங்கள் நடந்தாலே 30 நிமிட நடை பயிற்சியை செய்து முடிக்கிறார் என்று அர்த்தம். 

மிகுந்த முயற்சியோ / உடற்பயிற்சியோ தேவை இல்லை

இந்த நடைப்பயிற்சிக்கு நீங்கள் பெரிதும் சிரமப்படத் தேவையில்லை,  சாதாரணமாக நடந்தாலே போதும். ஒரு உடற்பயிற்சிக் கூடத்தில் நீங்கள் பெரிதும் சிரமப்பட்டு செய்யும் உடற்பயிற்சியை விட இந்த நடை பயிற்சி மிகுந்த ஆற்றலையும், உங்களின் கலோரிகளைக் குறைக்கவும் உதவும். 8 வடிவில் நடக்கும் பொழுது சீராக இடைவெளியில் மூச்சை உள்ளிழுத்தும் வெளியேற்றியும் நடந்தால் சிறப்பான பலனை நாம் பெறலாம்.

எவ்வளவு கலோரிகளை குறைக்க முடியும்

தினமும் இரு வேலை நாம் 30 நிமிடங்கள் சீரான இடைவெளியில் இந்த 8 வடிவ நடை பயிற்சி மேற்கொண்டால், ஒரு வாரத்திற்கு 2000 முதல் 3000 கலோரிகள் வரைக் குறைக்க முடியும். தோராயமாக 1/2 கிலோ உடல் எடை குறைய நிறைய வாய்ப்புகள் உள்ளது. உடற்பயிற்சியுடன் சேர்த்து நீங்க ஆரோக்கிய உணவை எடுத்துக் கொண்டால் உங்கள் உடல் எடை குறைவது மட்டுமில்லாமல் உங்களின் உடல் நலனும் காக்கப்படும்.

8 வடிவ நடைபயிற்சி வீடியோ வடிவில்

மேலும் படிக்க : சிறுதானியங்கள் உடல் எடையை எப்படி குறைக்க உதவுகிறது?

வெறும் உடற்பயிற்சி மட்டுமே நமது உடல் எடை குறைக்க உதவாது, அதே போல் உணவுக் கட்டுப்பாடு மட்டுமே நமது உடல் எடையைக் குறைக்க உதவாது. நமது மனது, உணவு மற்றும் சரியான உடற்பயிற்சி நமது உடலில் தங்கியுள்ள தேவை இல்லாத கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றி நமது உடல் எடையை குறைக்கும்.

About Ambika Subramani 9 Articles
Certified Nutritionist & Advanced diploma in Weight loss management

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*