Quick weight loss diet plan : 4 நாட்களில் எளிமையாக உடல் எடை குறைக்க

Quick weight loss, diet plan, எளிமையாக உடல் எடை குறைக்க , banana, milk, diet

Quick weight loss diet plan

4 நாட்களில் எளிமையாக உடல் எடை குறைக்க இதை விட சிறந்த முறை எங்கும் இல்லை என்று தான் சொல்ல முடியும். வேகமாக உடல் எடை குறையும் போது, நாம் எந்த அளவு குறைத்தோமோ அதே அளவு மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். இது பலருக்கு பெரிய அவஸ்தையான ஒன்றாகும். அனால் இந்த டயட் முறையில் அப்படி ஒன்று நடக்கவே நடக்காது.

அப்படி என்ன இந்த டயட் அப்படினு கேட்பவர்களுக்கு, வெறும் வாழைப்பழம் மற்றும் பால் இதை வைத்து 4 நாட்களில் 2 கிலோ வரையில் நான் எளிதில் குறைத்துள்ளேன். அந்த டயட் முறையை உங்களிடம் பகிர உள்ளேன்.

நம்ம தென்னிந்திய உணவில் அரிசி பெரும்பாலும் இருக்கும், இட்லி, தோசை, சாதம் என பெரிதாக அரிசியின் பங்கு இருக்கும். அரிசியில் அதிகமான அளவு மாவுச்சத்து உள்ளது, இது நமது உடல் எடை அதிகரிக்க அரிசி ஒரு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், நாம் உண்ணும் விதம் மற்றும் உடற்பயிற்சின்மை தான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். 

Quick weight loss Diet Plan 

இந்த டயட் முறையை நாம் ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப் போகிறோம். ஒரு மாதத்தில் இரண்டு முறை மட்டுமே இந்த டயட் பின்பற்ற வேண்டும், அதற்கு மேல் இந்த டயட் முயற்சி செய்யக் கூடாது. ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப இந்த அளவு மாறுபடும். எல்லோருக்கும், ஒரே அளவு உடல் எடை குறையாது. 

நாள் 1 :

காலை உணவுக்கு முன்:

கேரட் ஜூஸ் : Detox drink 

காலையில் கேரட் சிறிது சிறிதாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸியில் போடு நன்றாக அறைத்து வடிகட்டிக் கொள்ளவும். சிறிது எலுமிச்சை சாறு, சப்ஜா விதை(10 நிமிடங்கள் ஊற வைத்து) சேர்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டு  நாட்களும், இந்த கேரட் ஜூஸ் நாம் எடுத்துக் கொண்டால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.  முடிந்த வரை வெள்ளை சர்க்கரை அல்லது எந்த ஒரு இனிப்பும் சேர்க்காமல் இந்த ஜூஸ் குடிக்க வேண்டும்.

Quick weight loss, diet plan, எளிமையாக உடல் எடை குறைக்க , banana, milk, diet

கேரட் பிடிக்காதவர்கள், கிரீன் டி அல்லது எலுமிச்சை சாறு வெறும் வயிற்றில் தினமும் குடிக்கலாம்.

கேரட் உடல் எடை குறைக்க மட்டுமல்லாமல், முகத்திற்கு பொலிவு கொடுக்கவும், நம் சரும அழகை மேம்படுத்தவும் உதவுகிறது.

காலை உணவு 

காலை உணவாக நாம் ஒரு வாழைப்பழம்(Banana)  மட்டுமே எடுத்துக்கொள்ளப் போகிறோம். எந்த வாழைப்பழம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், பச்சை வாழைப்பழம், செவ்வாழை, கற்பூர வாழை.. 

10 நிமிடம் கழித்து ஒரு கப் பால்(milk)  அல்லது தேநீர் அல்லது காபி உங்கள் விருப்பம் போல எடுத்துக்கொள்ளலாம். இந்த பானம் நமது பசியை நன்றாக கட்டுப்படுத்தும். 

Quick weight loss, diet plan, எளிமையாக உடல் எடை குறைக்க , banana, milk, diet

மதிய உணவு

ஒரு  வாழைப்பழம் மட்டும் தான் நமது உணவு, வாழைப்பழம் அதிக அளவிலான ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்களை கொண்டது, உடல் எடை குறைக்க இது மிகவும் உறுதுணையாக இருக்கும்.

ஒரு வாழைப்பழத்தின் ஊட்டச்சத்து அளவுகள்(100g).Quick weight loss, diet plan, எளிமையாக உடல் எடை குறைக்க , banana, milk, dietவாழைப்பழத்துடன், 1/4 முதல் 1/2 கப் அளவுக்கு, பச்சை நிற வேக வைத்த காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாம், இந்த காய்கறிகள் வேக வைக்கும் போதும், முடிந்த வரை குறைந்த அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். பீன்ஸ், கேரட், முள்ளங்கி, கீரை வகைகள், வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய் என எந்த காய்கறி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

வேண்டுமானால், காய்கறிக்கு பதிலாக, ஒரு முட்டை சேர்த்துக் கொள்ளலாம். மாவுச்சத்து உள்ள காய்கறிகளை தவிர்க்க வேண்டும், உதாரணத்துக்கு, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு வாழைப்பழம், ஒரு கப் பால்(milk)  அல்லது தேநீர் அல்லது காபி உங்கள் விருப்பம் போல எடுத்துக்கொள்ளலாம். 

சிற்றுண்டி 

மாலை சிற்றுண்டியாக நாம் பாதாம் பருப்பு அல்லது முந்திரியை அதிகபட்சமாக 20 வரை எடுத்துக் கொள்ளலாம். இது நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றிகள்(antioxidants) மற்றும் ஒற்றை செறிவூட்டப்பெற்ற கொழுப்பு (Mono unsaturated fat) அதிக அளவில் கொடுக்கிறது. 

இரவு உணவு  

ஆப்பிள், இஞ்சி மற்றும் பேரிச்சம்பழம் சேர்ந்த ஒரு ஜூஸ். அப்பிளில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இஞ்சி செரிமானம் ஆவதற்கு ஒரு சிறந்த பொருள். பேரீச்சம்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இந்த அளவு ஊட்டச்சத்து அதிகமுள்ள மூன்று பொருள்களை வைத்து நாம் ஒரு ஜூஸ் தயார் செய்யப் போகிறோம்.

ஆப்பிள் 

சிறிய அளவு ஆப்பிள் எடுத்தால், இரண்டு எடுத்துக் கொள்ளவும், பெரிய ஆப்பிள் இருந்தால், 1 போதுமானது. நன்றாக கழுவி, தோலை நீக்கி, சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி 

தோல் நீக்கி நன்கு கழுவிய இஞ்சியை சிறிது சிறிதாக நறுக்கி அல்லது துருவி வைத்துக் கொள்ளவும். இது நமது ஜூஸ் சரியான பதத்தில் இருக்க பெரிதும் உதவும்.

பேரிச்சம்பழம் 

பேரீச்சம்பழத்தில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இதனால் நமக்கு பெரிய அளவு சக்தி இரவு முழுவதும் கிடைக்கும். ஒரு நாளைக்கு 6 பேரிச்சம்பழம் வரை உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

நறுக்கிய ஆப்பிள், இஞ்சி மற்றும் பேரீச்சம்பழத்தை ஒரு மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீருக்கு பதில் சிறிது கொழுப்பு நீக்கிய பால் அல்லது தயிர் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

நன்றாக அரைத்த இந்த ஆப்பிள் இஞ்சி ஜூஸ் நமது வயிறு நிரம்ப மட்டுமல்லாமல் இரவு முழுவது நமக்கு பசி எடுக்காமல் பார்த்துக் கொள்கிறது. 

ஆப்பிள் இஞ்சி ஜூஸ் பிடிக்காதவர்கள், 1 வாழைப்பழம் மற்றும் பால் உணவை இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முடிந்தவரை ஆப்பிள் இஞ்சி ஜூஸ் சேர்த்துக் கொண்டால், செரிமானத் தொல்லை இருக்காது.

ஆப்பிள் + இஞ்சி + பேரிச்சம்பழம் ஜூஸ் வீடியோ 

நாள் 2 :

காலை உணவுக்கு முன்  

கேரட் ஜூஸ் (முதல் நாள் உணவு போல, எந்த மாற்றமும் இல்லை)

காலையில் கேரட் சிறிது சிறிதாக நறுக்கி சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்ஸியில் போடு நன்றாக அறைத்து வடிகட்டிக் கொள்ளவும். சிறிது எலுமிச்சை சாறு, சப்ஜா விதை(10 நிமிடங்கள் ஊற வைத்து) சேர்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டு  நாட்களும், இந்த கேரட் ஜூஸ் நாம் எடுத்துக் கொண்டால், நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.  முடிந்த வரை வெள்ளை சர்க்கரை அல்லது எந்த ஒரு இனிப்பும் சேர்க்காமல் இந்த ஜூஸ் குடிக்க வேண்டும்.

கேரட் பிடிக்காதவர்கள், கிரீன் டி அல்லது எலுமிச்சை சாறு வெறும் வயிற்றில் தினமும் குடிக்கலாம்.

கேரட் உடல் எடை குறைக்க மட்டுமல்லாமல், முகத்திற்கு பொலிவு கொடுக்கவும், நம் சரும அழகை மேம்படுத்தவும் உதவுகிறது.

காலை உணவு 

காலை உணவாக நாம் ஒரு வாழைப்பழம்(Banana)  மட்டுமே எடுத்துக்கொள்ளப் போகிறோம். எந்த வாழைப்பழம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், பச்சை வாழைப்பழம், செவ்வாழை, கற்பூர வாழை.. 

10 நிமிடம் கழித்து ஒரு கப் பால்(milk)  அல்லது தேநீர் அல்லது காபி உங்கள் விருப்பம் போல எடுத்துக்கொள்ளலாம். இந்த பானம் நமது பசியை நன்றாக கட்டுப்படுத்தும்.

மதிய உணவு 

முதல் நாள் போல அதே உணவு மற்றும் வாழைப்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும், காய்கறிகளில் நீங்கள் விரும்பினால், மாற்றம் செய்து கொள்ளுங்கள், முடிந்த வரை அதிக மாவுச்சத்துள்ள காய்கறிகளை தவிர்த்திடுங்கள்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு வாழைப்பழம், ஒரு கப் பால்(milk)  அல்லது தேநீர் அல்லது காபி உங்கள் விருப்பம் போல எடுத்துக்கொள்ளலாம்.

சிற்றுண்டி 

மாலை சிற்றுண்டியாக நாம் பாதாம் பருப்பு அல்லது முந்திரியை அதிகபட்சமாக 20 வரை எடுத்துக் கொள்ளலாம். இது நமது உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றிகள்(antioxidants) மற்றும் ஒற்றை செறிவூட்டப்பெற்ற கொழுப்பு (Mono unsaturated fat) அதிக அளவில் கொடுக்கிறது. 

இரவு உணவு 

இரண்டாம் நாள் இரவு உணவு, முதல் நாள் உணவு போல ஆப்பிள் + இஞ்சி + பேரிச்சம்பழம் கலந்த ஜூஸ்.

இந்த இரண்டு நாள் டயட் முறையில், நாம் எந்த ஒரு உடற்பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. நம்முடைய உணவில் தேவையற்ற மாவுச்சத்துக்களை நாம் தவிர்க்கிறோம், இதுவே நமது உடலில் அதிக எடை சேராமல் இருக்க உதவியாக இருக்கிறது. இத்துடன், நாம் இரவில் எடுத்துக்கொள்ளும் இஞ்சி, நமது செரிமானத்தை சரி செய்து, பெருங்குடல் மற்றும் சிறுகுடலை சரியாக வேலை செய்ய வைக்கிறது.

நாம் இழந்த எடையை எவ்வாறு பராமரிப்பது?

நமது உடல் எடை  அதிகரிக்க பெரும்பாலும் நாம் உண்ணும் உணவின் கலோரி தான் காரணமாக இருக்கும். அதிக கலோரி உணவு நமது எடையை அதிகரிக்கும். எப்போதும், நாம் உண்ணும் உணவின் கலோரிகளை தெரிந்து வைத்திருப்பது நமது உடல் எடையை பேணிக்காப்பதில் பெரிய பங்காற்றுகிறது. 

முடிந்த வரை நாம் குறைத்த கலோரி உணவுகளை, நமது உணவில் சேர்த்துக் கொண்டாலே நமது உடல் எடை அதிகரிக்காது. இந்த டயட் முறையில் நீங்கள் இழந்த எடை, உங்களின் அதிக கலோரி உணவுகள் மீண்டும் உங்கள் எடையை பழைய நிலைக்கு கொண்டு சென்று விடும்.

இந்த டயட் முடிந்தவுடன்:

நாள் ஒன்று, நாம் காலை உணவு வழக்கம் போல எடுத்துக் கொள்ளலாம், குறைந்த கலோரி உணவுகளை தேர்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். 

மதிய உணவு, வாழைப்பழம் + பால் இந்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு உணவு, ஆப்பிள் + இஞ்சி + பேரீச்சம்பழ ஜூஸ் 

நாள் இரண்டு, காலை மற்றும் மதிய உணவு எந்த உணவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம், அதிக கலோரி மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர. 

இரவு உணவு, ஆப்பிள் + இஞ்சி + பேரீச்சம்பழ ஜூஸ் 

நாள் மூன்று, மூன்று வேலையும் குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிக புரதம், கொழுப்பு மற்றும் அதிக கலோரி உணவுகளை தவிர்த்திடுங்கள்.

இதற்குப் பிறகு, நீங்கள் உங்களின் விருப்பமான உணவுகளை, அதிக கொழுப்பு இல்லாமலும், அதிக மாவுச்சத்து இல்லாமலும், எண்ணையில் பொறித்த உணவுகளை தவிர்த்தாலே போதுமானது.

முடிந்த வரை காலை மற்றும் மாலையில் சிறிது நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து உங்கள் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.  

உங்கள் எடையை எளிய முறையில் குறைக்கவும் அதை பராமரிக்கவும் சிறந்த ஒரு டயட் முறையை இங்கே பகிர்ந்துள்ளேன். 

இந்த டயட் வீடியோ வடிவில் 

Related Post : Loss 6Kg in 7 days 

Related Post : 4 நாட்களில் எளிமையாக உடல் எடை குறைக்க

About Ambika Subramani 9 Articles
Certified Nutritionist & Advanced diploma in Weight loss management

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*