
My Weight loss journey :
பலரின் கனவு, எடை குறைப்பது(How I lost weight).
How I lost weight
எப்படி உடல் எடையை குறைப்பது??
எப்படி துவங்குவது?
எங்கே இருந்து துவங்குவது?
எப்படி நான் இதை வெற்றிகரமாக முடிப்பேன்?
உடல் எடை குறைத்த பிறகு, நான் எப்படி அதே நிலையை வைத்திருப்பது?
இந்த டயட் முறைக்கு பிறகு, மீண்டும் நான் குண்டாவேனா?
உங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் இந்த பதிவு பதில் தரும் என நம்புகிறேன்.
ஆம், நீங்கள் இந்த முறையை பின்பற்றி உங்களின் தேவை இல்லாத எடையை குறைக்கலாம், இதற்குப் பிறகு மீண்டும் உங்கள் எடை அதிகரிக்காது.
இந்த டயட் முறையை எப்படி துவங்குவது மற்றும் எப்படி அதே எடையை காப்பது என்பதை பார்க்கலாம்.
Video link to my weight loss Diet Plan
எனது இந்த எடை குறைப்பு முறையில், நான் 90 கிலோ வில் இருந்து எப்படி 63 கிலோ ஆனேன் என்பதை விளக்கியுள்ளேன், அவரவர் உடல் மற்றும் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப இந்த எடை குறைப்பு மாறுபடும்.
உடல் எடை குறைப்பது(weight loss) பெரிய கஷ்டமான ஒரு காரியம் இல்லை, நீங்கள் திட்டமிட்ட உணவு முறை மற்றும் சரியான வழிகாட்டல் இருந்தால் நீங்கள் தாராளமாக எடையை குறைக்கலாம். குறிப்பாக நமக்குள் தன்னம்பிக்கை வேண்டும், மற்றவர்களுக்காக வாழாமல், யார் எப்படி கிண்டல் செய்தாலும், அதை பொருட்படுத்தாமல், நமது வழியில், உடல் எடையை குறைக்கலாம்.
நான் 90கிலோவில் இருந்து 63 கிலோ ஆக எனது உடல் எடையை குறைத்தேன், தோராயமாக 17 கிலோ எடை நான் 4 மாதத்தில் குறைத்தேன்.
சிலர் கண்மூடித் தனமாக 4 நாட்களில் இவ்வளவு எடை குறைத்தேன், அவ்வளவு எடை குறைத்தேன் என்று நம்பி தங்களின் பயணத்தை தொடர்வார்கள், இது பிற்காலத்தில், நீங்கள் எவ்வளவு குறைத்தீர்களோ அதை விட அதிகமாக எடை ஏறுவதற்கு தான் துணை போகும். உங்கள் நேரம் மற்றும் உங்கள் சக்தி தான் விரையம். ஆரோக்கியமான முறையில் பொறுமையாக எவ்வாறு உடல் எடை குறைக்கலாம்?
நாம் உபயோகிக்கும் இந்த முறை குறைந்த கலோரி உணவு முறை, புகழ் பெற்ற GM diet முறையில் சிறிது மாற்றம் செய்துள்ளேன்.
“How i lost weight? No more than 1200 Calorie Meal per day”
ஒரு நாளைக்கு 1200 கலோரிகளுக்கு மேல் நாம் உணவை அருந்த கூடாது, இதை கணிக்க பல்வேறு முறைகள் உள்ளன.
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு உணவையும் இந்த ஆப் இல் பதிவிடுங்கள், உங்கள் மொத்த உணவு 1200 கலோரிகளுக்கு மேல் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
“தண்ணீர் அளவு உடல் எடை குறைப்பிற்கு அவசியமானது(Water for weight loss) “
நாம் தண்ணீர் அருந்தும் அளவு, நமது எடையை பொறுத்தது, 20கிலோ எடைக்கு 1 லிட்டர் நீர் அருந்த வேண்டும். 80கிலோ எடைக்கு 4 லிட்டர் நீர் அருந்த வேண்டும். நாம் குடிக்கும் தண்ணீர் இடைவெளி விட்டு அருந்த வேண்டும். உணவுக்கு 30 நிமிடங்கள் முன்பு ஒரு கப் அளவு குடிக்க வேண்டும். இந்த ஒரு கப் குடிநீர், நமது பசியின் அளவை 75% வரை குறைக்கிறது. இதனால் நம்மால் குறைந்த அளவு மட்டுமே உண்ண முடியும். (Controlling Food Intake).
உணவு உன்ன பிறகு, 30 நிமிடங்களில் மீண்டும் வெதுவெதுப்பான நீரை ஒரு கப் அருந்துங்கள். இது தேவை இல்லாத கொழுப்பு நம் உடலில் தாங்காமல் பார்த்துக்கொள்கிறது.
நாம் சீரக குடிநீர் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், ஒரு கப் குடிநீர் + 1 தேக்கரண்டி சீரகம் + எலுமிச்சை சாறு விட்டு வெதுவெதுப்பாக்கி குடிக்க வேண்டும்.
இந்த சீரக குடிநீர் நமது உடல் எடை குறைக்கும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது(Weight loss metabolism).
“How I lost my weight: சைவ டயட் (Vegan Diet)”
இந்த சைவ டயட் முறை GM diet முறையில் இருந்து சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இந்த டயட் முறை வீட்டில் ஓய்வில் இருக்கும் நபர்கள் எளிதில் பின்பற்றலாம், இதற்கு அதிக ஓய்வு தேவைப்படும் என்பதால், அலுவலகம் மற்றும் கல்லூரி செல்பவர்கள் இந்த டயட் முறை சிறிது கடினமான ஒன்றாக இருக்கும். அதற்க்காகத் தான் நான் சிறிது மாற்றத்துடன் இந்த டயட் பின்பற்றினேன்.
இந்த மாற்றம் செய்யப்பட்ட முறை எனக்கு 100% பலன் அளித்தது, அது மட்டுமல்லாமல் எனது Youtube நண்பர்கள் பலருக்கும் இந்த முறை சிறந்த பலன் அளித்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்த டயட் முறை நாம் 7 நாட்களுக்குப் பின்பற்றினால் சிறந்த பலன் கிடைக்கும்.
“நாள் 1 பழ டயட் | Day 1- Fruit Diet “
உணவின் முதல் நாள் பழங்களுடன் ஆரம்பமாக போகிறது, ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, பேரிக்காய், தர்பூசணி போன்ற நார்ச்சத்து நிறைந்த பழங்கள், நீர் மற்றும் வைட்டமின் சி(Vitamin C ) நிறைந்த பழங்களை நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் பழங்களுடன் மட்டுமே இருக்கப் போகிறது, நாம் பசிக்கும்போதெல்லாம் பழங்களை மட்டுமே உண்ணப் போகிறோம். இந்த உணவின் போது நாம் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும், அது மிக முக்கியமானது.
இரவில், நாம் 2 சப்பாத்தி / 1 வெங்காய தோசை (கோதுமை தோசை) எடுத்துக் கொள்ளலாம், இது நம்முடைய சக்தியை அதிகமாக வைத்திருக்க வேண்டும், ஏனெனில் நாம் எந்த உணவும் சாயங்காலம் வரை எடுத்துக் கொள்ளாததால், இந்த சிறிய உணவு, நமது கலோரியை சரியான நேரத்தில் வேலை செய்ய உதவும், காலை நம் மிகுதி சக்தியுடன் வேலை செய்ய இந்த உணவு உதவுகிறது.
“நாள் 2 காய்கறிகள் | Day 2- Vegetable Diet”
நான் இந்த டயட் முறையில் அதிகமாக வெள்ளரிக்காய் / பச்சை காய்கறிகளை தேர்ந்தெடுத்தேன். பாதி வேக வைத்த காய்கரிகள் மிகவும் சிறந்தது. எண்ணெய் இல்லாமலும், சமைக்கும் போது உப்பு மற்றும் காரம் மட்டும் சுவைக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
வெள்ளரிக்காய், பீர்க்கங்காய், முட்டைக்கோஸ் இந்த உணவுக்கு நல்லது, நமது சக்தியை நிலைநிறுத்த இந்த காய்கறிகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
“நாள் 3 பழங்கள் மற்றும் காய்கறிகள் | Day 3- Mixed Fruit & Vegetables Diet”
மூன்றாம் நாள் டயட் முறை முதல் மற்றும் இரண்டாம் நாள் கலவையாக இருக்கப்போகிறது, மேலே கூறப்பட்ட டயட் திட்டங்களின்படி, பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் சாப்பிடலாம். இரவில் 2 சப்பாத்தி / 1 வெங்காய தோசை (கோதுமை தோசை) எடுக்கலாம்.
“நாள் 4 | வாழைப்பழம் மற்றும் பால் | Day 4- Banana Milk Diet”
நாள் முழுவதும், நாம் அதிகபட்சம் 4 வாழைப்பழம் மற்றும் 3 கப் பால் எடுக்க வேண்டும், நீங்கள் இரவு உணவை விரும்பினால், வாழைப்பழத்தை அதிகபட்சமாக 3 ஆக குறைக்கலாம் மற்றும் 2 சப்பாத்தி / 1 வெங்காய தோசை (கோதுமை தோசை) எடுத்துக்கொள்ளலாம். வாழைப்பழமே நம் பசியை நிரப்பும், இரவு வரை நமது பசி ஓரளவுக்கு இல்லாமலே அன்றைய தினம் இருக்கும்.
“நாள் 5 – தக்காளி டயட் | Day 5- Tomato Diet”
எடை குறைப்புக்கு தக்காளி மிகவும் நல்லது, இது சைவ உணவில்(Vegan diet) பின்பற்றப்படும் ஒன்றாகும், குறைந்தபட்சம் நாம் நான்கு தக்காளிகளை எடுக்க வேண்டும், தக்காளிக்கு கூடுதலாக நீங்கள் சில காய்கறிகளையும் சில பழங்களையும் தேவைப்படும் போது எடுக்கலாம். இரவு உணவாக முதல் நாள் டயட் திட்டத்தின் படி 2 சப்பாத்தி / 1 வெங்காய தோசை (கோதுமை தோசை) எடுத்துக் கொள்ளலாம்.
“நாள் 6 – பழச்சாறு Day 6- Juice Diet”
மற்ற டயட் நாளில் நாம் சில காய்கறிகளை உணவாக உண்டோம் , ஆனால் ஆறாவது நாளில், நாம் பழச் சாறுகளை மட்டுமே குடிக்க வேண்டும். எந்த விதமான பழச்சாறுகளிலும், “வெள்ளை சர்க்கரை” சேர்க்க வேண்டாம். எடை குறைப்பில் வெள்ளை சர்க்கரை மிகப்பெரிய எதிரி. டயட் முழுவதும் இனிப்பு உட்கொள்வதை நாம் தவிர்க்க வேண்டும். சர்க்கரைக்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரையை நாம் சேர்க்கலாம்.
ஆறாவது நாள் டயட் மதிய உணவாக நாம் ஒரு கப் அரிசியை எடுத்துக் கொள்ளலாம், இரவு உணவு தோசையுடன் (கோதுமை தோசை) / சப்பாத்தி அல்லது பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.
“நாள் 7 மூன்று வேலை உணவு | Day 7- Three Meal Day”
ஆஹா, கட்டுப்படுத்தப்பட்ட உணவுடன் ஆறு நாள் வெற்றிகரமாக முடித்தோம், அது அருமை.
ஏழாம் நாள், நாம் மூன்று கட்டுப்படுத்தப்பட்ட உணவு டயட் திட்டத்துடன் இருக்கப்போகிறது. கட்டுப்படுத்தப்பட்ட உணவு என்னவென்றால், நாம் வழக்கமான உணவில் 2/3 பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இது நம் வழக்கமான உணவில் 66% ஆகும். இந்த முறை நமது மூன்று வேலை உணவில் ஒரு சிறு பகுதியை குறைகிறது.
எடை குறைப்புக்கு நாம் செய்ய வேண்டியது அவ்வளவுதான், இந்த உணவை பதினைந்து வாரங்கள் பயிற்சி செய்யலாம், ஏனெனில் இந்த எடை குறைப்பு உணவு நம்பிக்கைக்குரிய முடிவுகளைத் தருகிறது, நீங்கள் ஒவ்வொரு வாரமும் முயற்சி செய்யக்கூடாது. ஒரு மாதத்தில், 1 மற்றும் 3 வது வாரத்தில் நீங்கள் இந்த உணவை முயற்சி செய்யலாம் மற்றும் 2 மற்றும் 4 வது வாரம் ஓய்வு வாரமாக இருக்க வேண்டும்.
இந்த உணவின் போது, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உங்கள் எடையை சரிபார்க்கவும், முதல் முறையாக டயட் பின்பற்றுபவர்கள் ஒரு மாதத்தில் 4 முதல் 5 கிலோ வரை குறைக்க முடியும், இந்த காலகட்டத்தில் அனைத்து தேவையற்ற கொழுப்புகளும் எரிக்கப்படும், அடுத்தடுத்த டயட் வாரங்களில், நீங்கள் சிறிது சிறிதாக குறைப்பீர்கள் ஆனால் நிலையான எடை குறைப்பு மற்றும் உங்கள் எடை பராமரிக்கப்படும்.
நாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தால், நம் எடையை அதே வரம்பில் கொண்டிருக்கலாம், இழந்த எடை மீண்டும் ஏறாது. நாம் பொறுமையுடன் இருந்தால் மட்டுமே நம் எடையை குறைக்க முடியும். எனவே விரைவாக எடையைக் குறைக்க அவசரப்பட வேண்டாம், அது பின்னர் நமக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும்.
டயட்க்கு கூடுதலாக, சிறிய உடற்பயிற்சியைச் சேர்க்கவும், உங்களால் தினமும் செய்ய முடியாவிட்டால், வாரந்தோறும் 4 நாட்கள் முயற்சி செய்யுங்கள், நீங்கள் சிறிய உடற்பயிற்சியைச் செய்யலாம், எளிமையான விறுவிறுப்பான நடை / 30 நிமிட நடைப்பயணத்தை செய்யலாம், நீங்கள் யோகாவும் செய்யலாம்.
Related Post : My Papaya diet for easy weight loss
Leave a Reply