
Kodo millet அல்லது வரகு அரிசி நன்மைகள் மற்றும் உடல் எடை குறைக்க இந்த அரிசியின் பங்களிப்பு என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பழுப்பு நிற ஒரு சிறிய தானியம் தான் இந்த வரகு அரிசி, சிறுதானிய வகையை சேர்ந்த இந்த அரிசி, நாகரீக வளர்ச்சி என்ற பெயரில், இந்த கால மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு உணவு.
சிறுதானிய வகைகள் :
- சோளம்
- கம்பு
- குதிரை வாலி
- வரகு
- கேழ்வரகு
- சாமை
- தினை (உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் 2வது தானியம்)
- பனிவரகு
பாரம்பரிய உணவு வகைகளில் சிறுதானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதில் பெரும்பங்காற்றுகின்றன. இன்றைய சூழலில், குறைந்த மழை மற்றும் இயற்கை உரங்களை கருத்தில் கொண்டால், சிறுதானியங்கள் வருங்காலத்தில் அரிசியை குறைக்கும் என நம்பலாம். சிறுதானியங்கள் பெரிய அளவு செயற்கை உரங்கள் மற்றும் பெரிய அளவு நீர் இல்லாமல் இயற்கையான சூழலில் வளரக்கூடியது.
சிறுதானியங்கள் மனித உடலில் நுண் கிருமிகள் வளர்வதை தடுத்து, பெருங்குடலின் செயல்பாட்டை சீராக்குகிறது. சிறுதானியத்தில் கொழுப்பு மற்றும் தேவை இல்லாத மாவுச்சத்து மிகவும் குறைவு, இதனால் உணவு உண்ட பின் தேவை இல்லாத கொழுப்பு சேர்வது குறைக்கப்படுகிறது.
Kodo Millet :
சிறுதானியங்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் போன்றவை நிறைந்திருக்கிறது. மாவுச்சத்து வெள்ளை அரிசியை விட அதிகம் இருந்தாலும், அதிகப்படியான நார்ச்சத்து செரிமானம் விரைவில் நடைபெற பெரிதும் உதவுகிறது.
வரகு அரசியில் நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளதால், இதயத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. அமினோ அமிலங்களில் மொத்தம் 12 -ல் 11 அமினோ அமிலங்கள் வரகு அரிசியில் இருக்கிறது. பொதுவாகவே சிறுதானியங்களில் காரத்தன்மை(PH) அதிகம் என்பதால், செரிமானம் விரைவில் நடைபெறும். ஆறு மாதக் குழந்தைக்கு கூட வரகு அரிசி கொடுக்கலாம், அந்த அளவுக்கு விரைவாக செரிக்கும்.
வரகில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பை குறைக்கும் குணங்களும் இவை கொண்டிருப்பதால் உடல் எடை வெகுவாக குறையும். உடல் எடை குறைக்க மட்டுமில்லாமல், நீரிழுவு, இரத்த அழுத்தம், இதய நோய் இருப்பவர்கள், இந்த வரகு அரிசியை தங்களது உணவில் சேர்த்து கொள்ளலாம்.
வரகு அரிசி வைத்து என்ன செய்யலாம்?
சாதம்
சாதாரண அரிசி போலவே வரகு வைத்து நீங்கள் சாதம் சமைக்கலாம், இது வேக மிகக் குறைந்த நேரமே எடுத்துக்கொள்ளும். நீரை கொதிக்க வைத்து, ஊற வைய்த்த (30 நிமிடங்கள்) அரிசியை போட்டால், 10 முதல் 15 நிமிடங்களில் சாதம் வெந்து விடும்.
இட்லி / தோசை
இட்லி அரிசி 1/2 கப் மற்றும் 1கப் வரகு அரிசியை ஊற வைத்து, உளுத்தம் பருப்புடன் சேர்த்து அரைத்து, மறுநாள் இட்லி மற்றும் தோசை வார்க்கலாம். வரகு அரிசி தோசை செய்யும் முறை மற்றும் நீரிழிவுக்கான சிறந்த காலை உணவு இந்த வீடியோ.
வரகு எலுமிச்சை சாதம்
வெள்ளை அரிசிக்கு பதில் வரகு அரிசி வைத்து நாம் மிகவும் சுவையாக எலுமிச்சை சாதம் செய்யலாம்.
உடல் எடை குறைப்பு
இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை அதிக உடல் எடை. இதற்கு நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் வரகு அரிசியில் அதிகம் நிறைந்துள்ளன. தினந்தோறும் காலை அல்லது மதியம் வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். மூன்று வேலையும் வெள்ளை அரிசியில் செய்த உணவை உட்கொண்டால், உடல் எடை அதிகரிப்பதுடன், அதிகப்படியான மாவுச்சத்து சேரும்.
வரகு அரிசி உடல் எடை அதிகரிப்பு தொல்லைக்கு ஒரு பெரிய முற்றுப் புள்ளி, பாரம்பரிய உணவு வகைகளில் வரகு அரிசி எளிதில் செரிமானம் ஆகும் ஒரு அரிசி.
நீரிழிவால் உடல் எடை அதிகரிப்பு
இன்று உலகில் பலருக்கு இருக்கும் ஒரு நோயாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவத்தில் நமது உடலில் இயற்கையிலேயே சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் உதவுகிறது. வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.
நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால், நீரிழிவால் ஏற்படும் உடல் பருமன் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் இருந்தாலோ அல்லது போதிய அளவு இன்சுலின் கிடைக்காமல் இருந்தாலோ நீரிழிவு ஏற்படுகிறது, இதற்கு வரகு போன்ற சிறுதானியங்கள் ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
அதிக புரதம்
வரகு அரிசியில் புரத சத்து அதிகம் உள்ளது. உடல் சக்தி குறைந்திருப்பவர்கள், உடல் எடை சராசரி அளவிற்கும் கீழாக இருப்பவர்கள் வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களின் உடல் சக்தி அதிகரிக்கும். உடல் இளைத்தவர்களும் சரியான உடல் எடையை பெறுவார்கள். உடல் விரைவில் சோர்வடையாமல் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் பெறுவார்கள்.
சிறுதானியங்கள் :
சிறுதானியங்களில் நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை உடலின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு மிகவும் உதவுகிறது. அவை கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளன.
அதிக கொழுப்புள்ள அல்லது அதிக மாவுச்சத்துள்ள உணவுகள், செரிமானம் ஆக வெகு நேரம் எடுக்கும்,அனால் இந்த சிறுதானியங்கள் விரைவில் செரிமானம் ஆவதுடன், நமக்கு தேவையான சக்தியைக் கொடுக்கிறது.
சிறுதானியங்களில் அதிக அளவு மெக்னீசியம் இருப்பதால், ஆஸ்துமா மற்றும் ஒற்றை தலைவலிகளுக்கு பெரிய தீர்வாக உள்ளது. சிறுதானியங்கள் எந்த ஒரு பக்க விளைவுகளையும் உண்டு பண்ணுவதில்லை. அதனால், நீங்கள் உங்கள் உணவில் இதை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
உடல் எடை குறைக்க எண்ணுபவர்கள், குறைந்த கலோரி உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும், சிறுதானியங்கள் அனைத்திலும், கலோரி அதிகமா இருந்தாலும், அது நம்மை பருமன் அடைய செய்யாது. உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமல்லாமல், அனைவரும் சிறுதானிய உணுவுகளை முடிந்த வரை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது, நமது உடலுக்கு நன்மை பயக்கும்.
Weight loss diet : பப்பாளியைக் கொண்டு உடல் எடை எப்படி குறைப்பது?
Leave a Reply