
How to lose 4Kg in 5 Days – Apple Diet
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற கருத்தை அனைவருமே கேள்வி பட்டிருப்போம். ஏனெனில் ஆப்பிளில் அந்த அளவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் என்று உடலுக்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. அத்தகைய சத்துக்கள் உடலை வலுவோடு வைப்பதுடன், எந்த நோயும் உடலைத் தாக்காத வகையில் நோயின்றி ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. அதனால் தான், நோயால் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் செல்லும் போது, ஆப்பிளை வாங்கிச் செல்கின்றனர்.
உடல் எடையை குறைக்க ஏராளமான டிப்ஸ்கள் இருந்தாலும் இந்த ஆப்பிள் வைச்சு உடல் எடையை ரொம்பவும் சுலபமா குறைக்கலாம். ஆனால் சாப்பிடாமல் ரொம்ப கஷ்டப்படாமல் எடை இழப்பை பெற இந்த ஆப்பிள் நம் வீட்டில் இருந்தால் போதுமானது.
உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், துரித உணவுகள், உடல் செயல்பாடுகள் குறைந்து காணப்படுவது போன்றவை நம்முடைய உடல் எடையை அதிகரிக்க காரணமாகின்றது. இவைகள் உடலில் தேவையற்ற கொழுப்புக்களை அதிகரித்து உடல் பருமனை ஏற்படுத்தி விடுகிறது.
குறிப்பாக ஆப்பிளானது உடல் எடையை குறைக்கவும், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி, நீரிழிவு, புற்றுநோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. சரி, இப்போது அந்த ஆப்பிளை சாப்பிட்டால், என்ன நன்மைகளைப் பெறலாம் என்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, தினமும் ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தை கொள்ளுங்களேன்.
ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும்.
ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின், உடலில் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் செல்களின் வலிமை அதிகரித்து, நுரையீரலுக்கு சீரான இரத்த ஓட்டத்தை வழங்குகிறது.
ஆப்பிள் சாதாரணமாகவே நமது வயிறு நிறையும் உணவு, மிக எளிதாக பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும் ஒரு பழம்.
இந்த ஆப்பிள் டயட் மொத்தம் 5 நாள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
Apple Diet – முதல் இரண்டு நாட்களுக்கு உணவு முறை
முதல் இரண்டு நாள் நாம் ஆப்பிள் மட்டும் தான் உணவாக எடுத்துக்கொள்ளப் போகிறோம்.
காலை 2 ஆப்பிள்
மதியம் 1 ஆப்பிள்
இரவு 3 ஆப்பிள்
மதியம் 1 ஆப்பிள் நமக்கு போதுமானது, ஒரு வேளை உங்களுக்கு அதிக பசி எடுத்தால், வேறு ஏதாவது பழங்கள், பால், சிறிது பச்சை காய்கறிகள் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
உடல் எடை குறைக்க தூக்கம் மிகவும் முக்கியமானது, இரவு 3 ஆப்பிள் நமக்கு நல்ல தூக்கத்தை தரும்.
நீங்கள் விரும்பினால், மதியம் 2 ஆப்பிள், இரவு 2 ஆப்பிள் வீதம் கூட எடுத்துக்கொள்ளலாம்.
மொத்தம் 6 ஆப்பிள் ஒரு நாளைக்கு என இரண்டு நாட்கள் உண்ண வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
- உணவில் எண்ணைய் குறைவாக எடுப்பது உடல் எடை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஜூஸ் போன்று எடுப்பதை தவிர்ப்பது நல்லது
எந்த பழமாக இருந்தாலும், அதை ஜூஸ் போல குடிப்பதை விட, அப்படியே கடித்து சாப்பிடுவது தன் செரிமானத்துக்கு உடல் நலத்துக்கும் மிகவும் நல்லது.
Apple Diet – மூன்றாம் நாள் உணவு முறை
காலை உணவு
- ஒரு ஆப்பிள்
- ஒரு கப் பால்
- முழு கோதுமையில் செய்த ரொட்டி (அ ) பல தானிய ரொட்டி (Whole Wheat Bread) – No White Bread
- ஒரு பொறித்த முட்டை (அ) ஒரு அவித்த முட்டை
மதிய உணவு
- ஒரு ஆப்பிள்
- சமைத்த காய்கறிகள்
மாலை உணவு
- ஒரு கப் தயிர் (அ) ஒரு கப் பயிர் வகைகள் (அ) ஒரு கப் சுண்டல்
இரவு உணவு
- ஒரு ஆப்பிள்
- 1/2 கப் ஏதாவது பழம் மற்றும் காய்கறிகள் கொண்ட சாலட் (அ) காய்கறிகள் கொண்ட சாலட்
Apple Diet – நான்காம் நாள் உணவு முறை
காலை உணவு
- ஒரு ஆப்பிள் + ஸ்மூத்திஸ்
செய்யும் முறை வீடியோ லிங்க்
மதிய உணவு
- ஒரு ஆப்பிள்
- சமைத்த காய்கறிகள்
மாலை உணவு
- தர்பூசணி (அ) ஆரஞ்சு பழம் (அ) திராட்சை
(அ)
- பழ ஜூஸ்(சர்க்கரை இல்லாமல் )
இரவு உணவு
- ஒரு ஆப்பிள்
- முழு கோதுமையில் செய்த ரொட்டி (அ ) பல தானிய ரொட்டி (Whole Wheat Bread) – No White Bread
Apple Diet – ஐந்தாம் நாள் உணவு
- ஒரு ஆப்பிள்
- ஒரு முட்டை (அ) ஒரு கப் பால்
மதிய உணவு
- ஒரு ஆப்பிள்
- சமைத்த காய்கறிகள்
- பன்னீர் (அ) சோயா உணவு (அ) பயிர் வகைகள் (அ) பருப்பு
மாலை உணவு
- பாதாம், முந்திரி(10 to 15 Nuts)
- கிரீன் டி
இரவு உணவு
- ஒரு ஆப்பிள்
- சமைத்த காய்கறிகள்
ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் அதிகம் உள்ளதால், அவை உடலை கட்டழகுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபீனால், உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும். எனவே எடை குறைய விரும்புவோர், ஆப்பிளை தினமும் சாப்பிடுவது சிறந்தது.
Leave a Reply