தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

அனைத்து காலங்களிலும் விலை குறைவில் கிடைக்கும் ஒரு பழம் தான் பப்பாளி. பலருக்கு பப்பாளி என்றாலே பிடிக்காது. ஆனால் விலை குறைவில் கிடைக்கும் பப்பாளியை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்போர், மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அதுமட்டுமின்றி, பப்பாளியை அப்படியே சாப்பிட்டாலும் சரி அல்லது ஜூஸ் போட்டு குடித்தாலும் சரி, இதில் உள்ள நன்மைகளை முற்றிலும் பெறலாம். முக்கியமாக பப்பாளியை அன்றாடம் சாப்பிட்டு வந்தால், நல்ல பொலிவான முகத்தைப் பெறலாம். இங்கு பப்பாளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தினமும் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்

பப்பாளியை சாப்பிட்டால், உடலின் ஈஸ்ட்ரோஜென்னானது தூண்டப்பட்டு, உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். இப்படி உடலின் வெப்பநிலை சீராக இருந்தால், மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.

செரிமானத்தை மேம்படுத்தும்

Digestive system, papaya diet, san square, san square weight loss, weight loss

செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பப்பாளியை நட்கொண்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும்

மலச்சிக்கலை தடுக்கும்

Constipation, san square, san square weight loss management, papaya, papaya diet

வாழ்க்கை முறையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், மலச்சிக்கல் பிரச்சனைக்கு உள்ளாகக்கூடும். அப்படி நீங்கள் திடீரென்று மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டால், பப்பாளி சாப்பிடுங்கள். அதில் உள்ள நார்ச்சத்தினால் உடனே மலச்சிக்கல் குணமாகும்.

இதய பிரச்சனைகள்

Heart Desease, papaya diet, Papaya, san square, san square weight loss, weight loss management

பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் இருப்பதால், இதனை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக பிரச்சனையின்றி இருக்கும்.

புற்றுநோய்

தினமும் பப்பாளியை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள லைகோபைன் புற்றுநோய் செல்களை அழிக்கும். இதனால் கல்லீரர், மார்பகம் மற்றும் கணையம் போன்ற இடங்களில் வரும் புற்றுநோயைத் தடுக்கலாம்.

கீழ்வாதம் மற்றும் முடக்கு வாதம்

பப்பாளியில் பாப்பைன் மற்றும் சைமோ பாப்பைன் இருப்பதால், இவை உடலில் உள்ள உட்காயங்களை குறைக்கும். இதனால் கீல்வாதம் மற்றும் முடக்கு வாதம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

      எடையை குறைக்கும்

பப்பாளியில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், இதனை அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

ஆய்வு ஒன்றில் பப்பாளியை தினமும் உட்கொண்டு வந்தால், அவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே பப்பாளியை சாப்பிட்டு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்

       பொலிவான சருமம்

தினமும் பப்பாளியை உட்கொண்டு வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிப்பதைக் காணலாம்.

0

Ambika Subramani

Certified Nutritionist & Advanced diploma in Weight loss management

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *